Home

Tuesday 25 December 2012

வேலை இல்லா திண்டாட்டம்

இந்தியாவில் வேலை இல்ல திண்டாட்டம் மறுபடியும் தலை தூக்கி உள்ளது. இந்த ஆண்டு பட்டம் முடித்த பல மாணவ மாணவியர் வேலைகள் கிடைக்காமல் அல்லல் பட ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பானோர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்பது வருத்ததிற்குரிய விஷயம்.

பலரும் இன்று இன்ஜினியரிங் படிப்பை படிக்க முனைகின்றனர். அனால் அவர்களுக்கு பல உண்மைகள் தெரியவில்லை. அரும்பாடு பெரும்பாடு பட்டு பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பல மாணவ மாணவியர், தங்கள் அண்ணன் , அக்கா , தெரிந்தவர்கள் சொல் பேச்சை கேட்டு இன்ஜினியரிங் படிப்பு  படித்தால் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று நினைத்து இன்ஜினியரிங் படிப்பை படிக்கின்றனர்.

அனால் இவர்கள் செய்யும் ஒரு தவறான முடிவு இன்ஜினியரிங் படிப்பை எடுத்து விட்டோம் இனி நமக்கு வேலை தானாக கிடைத்து விடும் என்று நினைத்து கலூரியில் சேர்ந்த உடன் படிப்பை கோட்டை விட்டு  விடுகின்றனர்.
இது தான் எல்லா பிரச்சனைகளுக்கும் அடித்தளம்.